கோவை போலீஸ் கமிஷனர் பதவியேற்றார்!

கோவை: கோவை மாநகரின் புதிய காவல் ஆணையராக கண்ணன் இன்று பொறுப்பேற்றார்.

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சரவண சுந்தர் மேற்கு மண்டல ஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக சென்னை பெருநகர (தெற்கு) சட்டம் – ஒழுங்கு கூடுதல் கமிஷனர் கண்ணனை கோவை மாநகர காவல் ஆணையராக நியமித்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கண்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp