Coimbatore gold rate: தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது!

Coimbatore gold rate: கோவையில் இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

தொடர் விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கம், கடந்த வாரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்து விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்தது. நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,520க்கு விற்பனை ஆகி வருகிறது.

இதனிடையே இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 விலை குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் ரூ.12,380க்கும், ஒரு பவுன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.400 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.10,330க்கும், ஒரு பவுன் ரூ.82,640க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.221க்கும், ஒரு கிலோ ரூ.2,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வணிக சிலிண்டர்களுக்கு நாமம்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: வணிக கேஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்று வலியுறுத்தி கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...