கோவை ஜல்லிக்கட்டு: அடிக்கல் நாட்டப்பட்டது… தேதியில் மற்றம்!

கோவை ஜல்லிக்கட்டு: கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு 27ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 3 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

கோவையில் வரும் 25ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், ஏப்ரல் 27ம் தேதி எல்&டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட காளையர்கள் இப்போட்டியில் பங்கு பெற உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் கோவை மாவட்ட தலைவரும் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Recent News

Latest Articles