கோவை: கோவையில் இருந்து தன்பாத் செல்லும் சிறப்பு ரயில் நாளை 8 மணி நேரம் தாமதாக இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரயில் எண் 03680, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில் தன்பாத் வரை இயக்கப்படுகிறது,
இந்த ரயில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 7.50 மணிக்கு கோவை ஜங்க்ஷனில் இருந்து புறப்பட இருந்தது.
ஆனால், இணைப்பு ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, இந்த ரயில் அதே செப்டம்பர் 2ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
இதனால், மொத்தம் 8 மணி 25 நிமிடங்கள் தாமதமாக இந்த இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.