கோவை நூலகம் மற்றும் அறிவுசார் மையம்- 1.04 லட்சம் பேர் பயன்…

கோவை: கோவையில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் 2 ஆண்டுகளில் 1.04 பேர் வருகை புரிந்து பயன்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளில் 1.04 இலட்சம் நபர்கள் வருகை புரிந்து பயன் பெற்றுள்ளனர் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 05.01.2024 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட உப்பிலிபாளையம், ஆடிஸ் தெருவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது.

மேலும், இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் TNPSC,TNUSRB, TRB, TN-TETSS, GATE, UGC/NET/SET, UPSC, BANK, NDA,CAT, NEET, JEE, CLAT, RRB, IELTS, NCERT உள்ளிட்ட தேர்வுகளுக்கு பங்கேற்கும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 35718 நபர்கள், 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 66683 மாணவர்கள் மற்றும் ஜனவரி 2026 முதல் பிப்ரவரி வரை 4850 மாணவர்கள் என சுமார் 1. 04 இலட்சம் மாணவர்கள் வருகைப் புரிந்து பயன்பெற்றுள்ளனர்.

அதேபோன்று இந்த அறிவுசார் மையத்தில், குரூப் 2 தேர்வில் 6 மாணவர்களும், குரூப் 4 தேர்வில் 12 மாணவர்களும். IIT தேர்வில் 2 மாணவர்கள், வங்கித் தேர்வில் 1 மாணவர்NET தேர்வில் 1 மாணவர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மேலும், இம்மையத்தில் ஒவ்வொரு மாதமும் ENTREPRENEURSHIP, HUMAN RESOURCES, GRAPHICS DESIGNING AND VIDEO EDITINGDIGITAL MARKETING, SOCIAL MEDIA STRATEGIES, SSCRRB & BANKING I SKILL DEVELOPMENT PROGRAM மற்றும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் இரண்டு முதல்வர் படைப்பகம்- விரைவில் திறப்பு…

கோவை: கோவையில் இரண்டு இடங்களில் முதல்வர் படைப்பகம் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் முதல்வர் படைப்பகம் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு...

Video