கோனியம்மன் தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

கோவை: கோனியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்வில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கினர்.

Advertisement

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.

கோவை மாவட்டதின் காவல் தெய்வம் என்று வணங்கக்கூடிய கோனியம்மன் திருக்கோவில் தேரோட்ட திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாசலின் சார்பாக வரக்கூடிய பக்தர்களுக்கு சுமார் 15,000 தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

Advertisement

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரும் அண்ணன் தம்பியாக இந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலுக்கு அக்னி குண்டம் கொண்டு வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்தனர். மேலும் பக்தர்களுக்கும் குடிநீர் அளிக்கப்பட்ட சம்பவம் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நாங்கள் செய்து வருகிறோம். மதத்தைக் கடந்த நட்புணர்வுடன் வாழும் மக்கள் நாங்கள் எனவும் அவ்வாறு கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் எங்களால் முடிந்த இதை செய்வது மகிழ்ச்சி என தெரிவித்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...