64வது தேசிய மருந்தியல் தினம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோவையில் 64 ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை ஒட்டி
போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

64 ஆவது தேசிய மருந்தியல் வாரம் 2026 ஐ ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் இணைந்து துடியலூரில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் போருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

Advertisement

இதில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரூபன்ராஜ் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நிகழ்வு தொடங்குவதற்கு முன் மாணவர்களும் ஆசிரி யர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இயக்குநர் முனைவர் சிவக்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் அழகர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

700க்கும் மேற்பட்ட மருந்தியல் மாணவ மாணவிகள் மற்றும் 42 ஆசிரியர்கள் கலந்து கொண்டு கைகளில் போதைப் போருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, போதை பொருள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது துடியலூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோவை சாலையில் விஸ்வநாதபுரம் வரை சென்றது.

இந்த நிலையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு- கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை: கேரளா ஸ்டோரி படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாக திரையரங்கை முற்றுகையிட...

Video