கோவையில் ரோந்து வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை: கோவையில் ரோந்து வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு ரோந்து வாகனங்கள் பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இரண்டு மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் அதிகளவு மாநகர காவல் துறை சார்பில் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் ரோந்து வாகனங்கள் குறித்தும் புகார் அளிப்பதற்கான தொடர்பு எண்கள் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் ரோந்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை ஆயுதப்படை மைதானத்தில் இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோந்து பங்கேற்றன. சைபர் கிரைம் புகார் எண் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு மாநகர காவல் துறை சார்பில் என்னென்ன முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ரோந்து வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இந்த பேரணி நடைபெற்றது.

Recent News

Video

Join WhatsApp