Coimbatore pediatric hospital | கோவையில் செயல்பட்டு வரும் சூழந்தைகளுக்கான மருத்துவமனைகள் என்னென்ன, அவை எங்கெங்கு உள்ளன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
நாகரீகமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகின்ற நிலையில், குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகளும் பருவகால காய்ச்களும் சளியும் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கான சிகிச்சைகள் குறைந்த அளவில் இருந்தாலும், இன்றைய சூழலில் புதுவித நோய்கள், முன் காலப் பிரசவம், சுவாச கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு பிரச்னைகள் பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக, குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், நம்பகமான மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகி உள்ளது. ஆனால் எந்த மருத்துவமனை குழந்தைகளுக்குச் சிறந்தது என்ற குழப்பமும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.
அந்த வகையில், கோவையில் பெற்றோர் அதிகம்நாடும், குழந்தைகளுக்கான முக்கிய மருத்துவமனைகளின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம்.
Table of Contents
Coimbatore pediatric hospital
கோவை அரசு மருத்துவமனை
கோவையில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் முதன்மையானது அரசு மருத்துவமனை. இங்கு குழந்தைகளுக்கான தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. இது தவிர பச்சிளம் குழந்தை பாதுகாப்பு மையம், தாய்ப்பால் வங்கி உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன. கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கோவை மட்டுமல்லாது, வெளி மாவட்ட மற்றும் மாநில மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் விவரங்கள்: https://coimbatore.nic.in/public-utility/government-coimbatore-medical-college-hospital/
மாசாணிக் குழந்தைகள் நல மருத்துவமனை

ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கி வரும் இந்த மருத்துவமனை, குழந்தைகள் நல சிகிச்சையில் நீண்ட அனுபவம் பெற்றதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான பல்வேறு பொதுவான மற்றும் சிக்கலான நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள்: https://www.masonichospital.org/
சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை

திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சையில் கவனம் செலுத்தி வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி, நோய் தடுப்பு, அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள்: https://www.coimbatorechildtrust.com/
PSG மருத்துவமனை

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள PSG மருத்துவமனை, குழந்தைகள் நல சிகிச்சை மற்றும் NICU வசதிகளுக்காக பிரபலமானதாக உள்ளது. கடுமையான மற்றும் அவசர நிலை குழந்தை சிகிச்சைகளுக்காக பலரும் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.
மேலும் விவரங்கள்: https://www.psghospitals.com/
ராமகிருஷ்ணா மருத்துவமனை

ஆவாரம்பாளையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கோவையின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவிலும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்கள்: https://www.sriramakrishnahospital.com/
கங்கா மருத்துவமனை

சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நவீன சிகிச்சை வசதிகள் உள்ளன. இன்சூரன்ஸ் வசதிகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், பல தரப்பினரும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும் விவரங்கள்: https://www.gangahospital.com/
குழந்தைகளின் உடல்நலம் என்பது எதிர்கால சமூகத்தின் அடித்தளமாக இருப்பதால், பெற்றோர்கள் சரியான மருத்துவ ஆலோசனையும், காலம்தோறும் பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம். இந்த பட்டியல் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும், குழந்தைகளின் உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த கோவையில் உள்ள மேலும் சில சிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனைகள் மற்றும், கிளினிக்குகளை கீழே கமென்ட்டில் பதிவிடலாம். வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
One day trip from Coimbatore | கோவையில் உள்ள சிறந்த அட்வென்சர்ஸ் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்…!

