கோவை: கோவையில் பில்லூர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு பகுதியில் பில்லூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக பவானி ஆற்றில் இருந்து கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வரை சாலை ஓரத்தில் ராட்சத குழாய்கள் அமைக்கபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த குழாயில் அமைந்துள்ள வீரபாண்டி பகுதியில் சாலை நடுவே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குழாய் உடைப்பை ஏற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதுடன் தண்ணீர் சுமார் 2கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் பெருக்கெடுத்து ஓடியது இதனால் அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள் மாற்றிவிட பட்டு உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

