Coimbatore Power cut: கோவை மின்தடை குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் இது குறித்து NCC-இடம் மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மின்பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாதந்தோறும் ஒரு நாளில், ஒவ்வொரு பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
இந்த நேரத்தில், பழுதடைந்த மின் வயர்களை மாற்றுதல், மின் கம்பங்கள் மற்றும் வயர்களில் உராய்ந்து கொண்டிருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்தடை அறிவிப்புகளை மின்வாரியத்திடம் இருந்து பெறும் News Clouds Coimbatore (NCC) அந்த விவரங்களை தினந்தோறும் செய்தியாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது.
இதனிடையே கடந்த ஒரு சில தினங்களாக மின்தடை அறிவிப்பு மின் வாரியத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம்.
Coimbatore Power cut
அதற்கு மின்வாரிய சீனியர் எஞ்சினியர் NCC-இடம் கூறியதாவது:-
கோவையில் தற்போது மின்தடை அமலாகவில்லை. மாணவர்களுக்கு தேர்வுக்காலம் தொடங்க உள்ளதால் மின்தடை நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இக்கட்டான சூழலில் அல்லது, மிகவும் தேவையான நேரத்தில் மட்டும் ஏதேனும் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படும்பட்சத்திலேயோ கூடும்.
அப்படியான பணிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் பொதுமக்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்படும். என்று கூறினார்.
அதனால் கோவையில் தற்போதைக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மின்தடை எங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. நமது வாசகர்கள் தங்கள் பகுதியில் மின்தடை ஏற்படும்பட்சத்திலோ, அல்லது முன்கூட்டியே இதற்கான அறிவிப்பை வாட்ஸ்-ஆப் மெசேஜ் மூலமாக நியுஸ் க்ளவுட்ஸ்-இடம் தெரிவிக்கலாம். வாட்ஸ்-ஆப் எண்: 9944438011
இந்த தகவலை கோவை மக்கள் அனைவருக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

