Coimbatore Power Cut: கோவையில் திங்கட்கிழமை (19ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்களின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவையில் மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட இடங்களில் ஒரு நாள் மின்தடையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நாளில் பழுதான மின் கம்பங்கள் சீரமைப்பு, மின் வயரில் உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், மின் வயர்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி கோவை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பின்வரும் பகுதிகள் மட்டுமல்லாது கூடுதல் இடங்களில் மின் விநியோகம் தடைபடலாம், அல்லது குறிப்பிட்டுள்ள இடங்களில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இது மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மின்தடை ஏற்படும் இடங்கள் Coimbatore Power Cut:
சரவணம்பட்டி துணை மின்நிலையம்:-
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளகிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம்,
கே.என்.ஜி.புதூர், மணியகரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கணியூர் துணை மின்நிலையம்:-
கொள்ளுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ரம்பாளையம், காலியாபுரம், சங்கோதிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கடுவெட்டிபாளையம் துணை மின்நிலையம்:-
பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் ஒரு பகுதி, சுண்டமேடு ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய இடங்களில் காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


Need
Super