Coimbatore power outage: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
சிட்கோ (குறிச்சி) துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகள்
சிட்கோ, சுந்தராபுரம் (சில பகுதிகள்), பொதனூர் (சில பகுதிகள்), எல்.ஐ.சி. காலனி, காமராஜ் நகர் மற்றும் குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கிணத்துக்கடவு துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகள்
சுலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (சில பகுதிகள்), மாண்றம்பாளையம், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சீரநாயக்கன் பாளையம் துணை மின்நிலையம் சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன் புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (பகுதி), காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம்-வடவள்ளி சாலையின் ஒரு பகுதி
மேற்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அதேபோல், சில பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் தீர்மானத்திற்கு உட்பட்டது.