கோவை: கோவை ஜங்சனில் தண்டவாளத்தில் கற்களை வீசி சிக்னல் பாக்சை சேதப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே 4 இளைஞர்கள் தண்டவாளத்தில் கற்களை வைத்திருப்பதாக போலீசாருக்கும், ரயில்வே பணியாளர்களுக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ், விஜயசங்கர், சதீஷ்குமார், புவனேஷ்வரன் ஆகியோர், தண்டவாளத்தில் சிக்னல் பாக்ஸ் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.