கோவை: கோவையில் இந்திய ரிசர்வ் வங்கி RBI முன்னெடுத்துள்ள நிதிசார் கல்வி வார பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்னெடுத்துள்ள நிதிசார் கல்வி வாரம் 2026, பிப்ரவரி 9 முதல் 13 வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அதற்கான விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா தாட்கோ பொது மேலாளர் ரஞ்சித்குமார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மணிமேகலை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூரில் நிதிசார் கல்வி வாரம் 2026 மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு போஸ்டர் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்னெடுத்துள்ள நிதிசார் கல்வி வாரம் 2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் கருப்பொருள் KYC – பாதுகாப்பான வங்கிப்பணிகளுக்கான முதல் படி” ஆகும்.
இதனை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிதிசார் கல்வி வார விழிப்புணர்வு போஸ்டர்களை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சி முன்னணி வங்கியான கனரா வங்கி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
நிதிசார் கல்வி வாரத்தின் போது, மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள். கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் நிதிசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, KYC முக்கியத்துவம், பாதுகாப்பான வங்கிப்பணிகள் மற்றும் நிதிசார் மோசடி தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.

