கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைது…

கோவை: கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கடந்த 8 நாட்களாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் அதனை 25% நிர்ணயம் செய்ய வேண்டும்,

நில அளவைத் துறையில் வெளி முகமை ஒப்பந்த அடிப்படையில் ஆன பணி நியமனங்களை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் அவர்களின் வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 9வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களது கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் தேர்தல் நெருங்கி வரும் பொழுதாவது அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பணிகள் தான் தடைப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் உடனடியாக தங்களை அழைத்து பேச வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உணவு திருவிழா தொடங்கியது…

கோவை: கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று...

Video