கோவையில் டெஸ்லா சைபர் ட்ரக் – வைரலாகும் வீடியோ! எலான் மஸ்க்கின் சொகுசு வாகனம் வருகை !!!

இரும்பு ராட்சதன் – 5 கோடி மதிப்பிலான எலான் மஸ்க்கின் கனவு வாகனம் கோவையில் உலா !!!

தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், எப்போதும் சொகுசு கார்களின் புகலிடமாக இருந்து வருகிறது. ஆனால், இன்று கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், அந்தப் பாதையில் சென்ற அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘சைபர் ட்ரக்’ (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் முதன்முறையாக வலம் வந்த போது, மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

விண்வெளி ஓடம் போன்ற அதன் வித்தியாசமான வடிவமும், துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் (Stainless Steel Exoskeleton) ஆன உடலமைப்பும், ஏதோ ஹாலிவுட் படக் கருவி ஒன்று சாலைக்கு வந்து விட்டது போன்ற ஒரு வைப்-ஐ உருவாக்கியது.

இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் தென்பட்ட இந்த ‘எலக்ட்ரிக் பீஸ்ட்’, இப்போது கோவை மக்களின் கண்களுக்கும் விருந்தளிக்கத் தொடங்கியுள்ளது.

சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையே தாங்கும் வல்லமை கொண்டது என்பது கூடுதல் அம்சம்.

கோவையின் அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த வாகனம் தென்பட்ட போது, கார் பிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஒருபுறம் இதன் விலை மற்றும் இறக்குமதி வரி குறித்து விவாதங்கள் எழுந்தாலும், மறுபுறம் இதன் மாஸ் லுக் அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.

இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த சைபர் டிரக், கோயம்புத்தூர் போன்ற ஒரு தொழில் நகரத்தின் சாலைகளில் வலம் வருவது, நகரின் லெவலை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் காட்டுவதாக இளைஞர்கள் உற்சாகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.