கோவை: கோவையில் கள்ளச்சாவி போட்டு பைக்கை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வடவள்ளி பகுதியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை, வடவள்ளி, சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை, அதிகாலை 3 மணி அளவில் வந்த மர்ம நபர் ஒருவர், மிகச் சாதாரணமாக கள்ளச் சாவிகளைப் போட்டுத் திறந்து திருடிச் சென்றுள்ளார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இந்த காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பைக்கை திருடி சென்றவரை தேடும் பணிகள் துவங்கியுள்ளது.

