Coimbatore weather: கோவையில் இந்த வாரம் வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை வானிலை முன்னறிவிப்பை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
கோவையில் நடப்பு வாரத்தில் பகலில் அதிகபட்சமாக 34°C முதல் 35°C வரை வெப்பநிலை பதிவாகும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை பெரும்பாலும் பகுதிகளில் அதிகளவு வெப்பம் உணரப்படும். பிப்ரவரி 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மட்டும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் நகரப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34°C முதல் 35°C வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°C முதல் 23°C வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவையில் பகலில் வெப்பம் சற்று அதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மேகமூட்டம் காரணமாக இதமான சூழல் நிலவும்.
இந்த வானிலை முன்னறிவிப்பிற்கேற்ப பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.
வானிலை கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை. அடுத்து வரும் வானிலை அப்டேட்டை தெரிந்து கொள்ள NCC செய்தித்தளத்துடன் இணைந்திருங்கள்.

