கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- தொடங்கியது இறுதி வாதம்…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இறுதி வாதம் துவங்கியது.

Advertisement

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும் ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அச்சம்பத்தில் தொடர்புடைய சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை சுட்டுப்பிடித்தனர்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட வாதம் இன்று தொடங்கி உள்ளது. இதற்காக கைது செய்யபட்ட சதீஷ்,காளீஸ்வரன்,தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். இன்று அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும், நாளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதம் முன்வைக்கபடும். பின்னர் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...