கோவை: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றும் நாளையும் கோவையில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 8, 9 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு இல்லை. இந்த வாரம் கோவையில் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 34 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
