Coimbatore weather: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வரும் 7 நாட்களும் கோவையில் பெரும்பாலும் பகுதி மேகமூட்டத்துடன் வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore weather
கோவையில் இன்றும், நாளையும் (ஜனவரி 9,10) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த இரண்டு நாட்களிலும் குறைந்தபட்சம் 18 டிகிரிசெல்சியஸ் முதல், அதிகபட்சம் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
ஜனவரி 11ம் தேதி மாவட்டட்தின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் குறைந்தபட்சம் 18 டிகிரிசெல்சியஸ் முதல், அதிகபட்சம் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.
கோவையில் ஜனவரி 12ம் தேதி (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13ஆம் தேதி மீண்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், 14 மற்றும் 15ஆம் தேதிகளில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 18-19 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்ச வெப்பநிலை 29-31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

