Header Top Ad
Header Top Ad

சரவணம்பட்டியில்  காவலாளியிடம் செல்போன் பறித்து  சென்ற  கல்லூரி பள்ளி மாணவர்கள்!

கோவை: சரவணம்பட்டியில் காவலாளியிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர்கள் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளக்கிணறு அருகே வசித்து வருபவர் வெங்கடாசலம்( வயது 51 ). இவர் சரவணம்பட்டி அருகே துடியலூர் ரோட்டில், உள்ள ஹோட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

சம்பவத்தன்று இரவில் வெங்கடாச்சலம் வேலை முடிந்து அவர் தங்கி இருந்த அறைக்கு நடந்து சென்றார். அங்கே உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து வெங்கடாசலம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்  பாலகிருஷ்ணன், வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற நபர்களை தேடினார்.

அப்போது அவர்கள் நீலகிரியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் மற்றும் 17 வயது பள்ளி மாணவன் என தெரியவந்தது.

கோவை டெக் சிட்டியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் உல்லாச செலவுக்கு ஆசைப்பட்டு போதையில் சிறுவனுடன் சென்று செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவர் ஆகியோர் கோவையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில்  ஈடுபட்டு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Recent News