வணிக சிலிண்டர்களுக்கு நாமம்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: வணிக கேஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்று வலியுறுத்தி கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கேஸ் சிலிண்டர்கள் நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் போதிய இருப்பு வைக்காமல் அலட்சியம் காட்டியதுதான் காரணம் என்று இண்டியா கூட்டணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக சிலிண்டர்களுக்கு நாமம் போட்டு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...