Header Top Ad
Header Top Ad

டாஸ்மாக்கில் இனிமே ஸ்கேன் செய்தால் தான் ‘சரக்கு’

கோவை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஸ்கேன் செய்து விற்பனை செய்யப்படும் திட்டம் கோவையில் அமலுக்கு வந்தது…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்கேனிங் முறையில் மது விற்பனை செய்யப்படும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கோவையிலும் மது பாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஊழியர்கள் ஸ்கேன் செய்த பிறகே மது பானங்களை விற்பனை செய்கின்றனர். மதுபானங்களை வாங்க வருபவர்களும் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

Advertisement

இந்த ஸ்கேனிங் முறைக்காக ஒவ்வொரு மது பாட்டிலிலும் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டு உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட ஸ்கேனிங் கருவிகளை ஊழியர்கள் மது பாட்டில்களில் உள்ள க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்த பிறகு மதுபானம் மற்றும் அவற்றின் விலை விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது அதன் பின்னரே அந்த மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்கேனிங் முறையால் ஒரு கடையில் எவ்வளவு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது அதன் மதிப்பு என்ன என்பது உடனுக்குடன் அதிகாரிகளுக்கு சென்றடையும்.

சில சமயங்களில் ஸ்கேன் செய்யும் போது தாமதம் ஆவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். எனவே கேரளாவில் இருககும் கணினி முறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என கூறுகின்றனர்.

Recent News