இருமல் மருந்து விவகாரம்- கோவையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ள இந்திய மருத்துவர் சங்கத்தினர்…

கோவை: மத்திய பிரதேச இருமல் மருந்து உபகாரம் தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.கடந்த வாரம்
மத்திய பிரதேசத்தில் மருத்துவர் இருமல் மருந்து பரிந்துரைத்த விவகாரத்தில் குழந்தைகள் பாதிக்கபட்டனர்,
பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு டானிக் வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டும் போது மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

Advertisement

மத்திய பிரதேசத்தில
குழந்தைகள் இறப்பிற்கு டைஎத்திலின் கிளாகல் என்ற டாக்சிக் மருந்து இருமல் மருந்தில் அதிகம் கலத்து இருப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது எனவும், இது மிகவும் அபாயகரமான மருந்து எனவும் தெரிவித்தார். வழக்கமாக இருமல் மருந்தில் இது போன்ற மருந்துகளை சேர்ப்பது கிடையாது என தெரிவித்த அவர், முதலில் மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்து இந்த மருந்தில் எந்த பிரச்சினையும் இல்லை என சொல்லி விட்டனர், ஆனால் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் என்பதால்
தமிழக அதிகாரிகள் சோதனையில்தான் 46 சதவீதம் டைஎத்திலின் கிளைக்கால் இருப்பது தெரியவந்தது எனவும் தெரிவித்தார். டை எத்திலின் கிளைகால் மருத்துவத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத நிலையில், இதை எப்படி பயன்படுத்தினார்கள் என தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

டைஎத்திலின் கிளைக்கால் நரம்பு மண்டலம், நுரையீரல் இருதயம், சிறுநீரகம் போன்றவற்றை விரைவாக தாக்க கூடியது எனவும் தெரிவித்தார். குஜராத் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சோதனை செய்த பொழுது அதில் 6 சதவீதம் இருந்துள்ளது எனவும், டைஎத்திலின் கிளக்கால் இது கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது எனவும் , இது ஐஸ் கட்டி தயாரிக்கவும், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கவும், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மருந்தக உரிமையாளர்கள் , வாங்கும் பொருட்களை அடிக்கடி சரியாக ஆய்வு செய்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு
இருமலுக்கு தேன் கொடுத்தாலே போதும், டானிக் எதுவும் கொடுக்க தேவையில்லை எனவும் , பெற்றோர் இதை உணர்வதே இல்லை எனவும் தெரிவித்தார். இதை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தோல்வியாக கூட எடுத்துக் கொள்ள முடியும் எனவும் IMA தலைவர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ சங்க செயலாளர் கார்த்திக் பிரபு,
பெற்றோர் குழந்தைக்கு டானிக் கொடுக்க வேண்டும் என டாக்டர்களை நிர்பந்திக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் மருத்துவர் கைது கண்டிக்கதக்கது எனவும், அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவர் கைது என்பது தீர்வு கிடையாது எனவும் தெரிவித்தனர்.

Advertisement

மருந்துவரை மட்டும் கைது செய்வது என்பது கண்டிக்கதக்கது எனவும், அனுமதி கொடுத்தது மருத்துவர் கிடையாது, தயாரிப்பு நிறுவனம் மட்டுமே பொருளினுடைய தரத்திற்கு பொறுப்பாக முடியும் எனவும் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட மருந்தை மருத்துவர் பரிந்துரை செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், பொருள் தயாரிப்போ, அதில் விலை நிர்ணயமோ மருத்துவரின் பங்கு கிடையாது எனவும் தெரிவித்தார்.

இருமல் மருத்து குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,மருந்தகங்களில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்க கூடாது எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் கார்த்திக் பிரபு தெரிவித்தார். தடை செய்யப்பட்ட கோல்ட்ட்ரிப் மருந்தை உடனடியாக மார்க்கெட்டில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். இருமல் மருந்து குறித்து மருத்துவர்களுக்கு தனியாக ஒரு கருத்தரங்கு நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மருந்து விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Recent News