அரசியலுக்கு வருவீர்களா?- நடிகர் மாதவன் அளித்த பதில்- கோவையில் பேட்டி

கோவை: அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் மாதவன் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை ஒப்பணக்கார வீதியில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை என்றார். தாம் நடித்து வரும் ஜிடி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், கோவையில் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த கேள்விக்கு இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள், கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் அதை பற்றி பேச வேண்டாம் என கூறி சென்றார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் புதிய மேம்பாலம்; எம்.எல்.ஏ.சுகுமார் கொடுத்த அப்டேட்!

சூலூரில் புதிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சாலை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கலைக்கல்லூரி திட்டங்கள் குறித்தும் அவர் அப்டேட் அளித்துள்ளார்.

Video

கோவையில் கடவுள் போல் வந்து போதை ஆசாமியிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை நாய்கள் கடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை துடியலூர் அருகே உள்ள...