கோவை: கடலூரில் ரயில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவை: கடலூரில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சூர்யா நகர், சிவலிங்காபுரம் நகர், காமாட்சி நகர், சக்தி நகர், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கருப்பு பேட்ச் அணிந்து உயிரிழந்த மாணவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மக்கள் இது போன்ற ஒரு சம்பவம் இனிமேலும் நிகழாத வண்ணம், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில்வே கேட் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்காக மேம்பாலங்களை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





Comments are closed.