சர்க்கரை நோய் டிப்ஸ் 2026: ரத்த சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த இந்த எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ் பின்பற்றுங்கள். உணவு, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமே நீரிழிவு மற்றும் சர்க்கரை தொடர்பான சிக்கல்களை தீர்க்கலாம்.
Table of Contents
சமீபத்திய மருத்துவத் தரவுகளின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருந்துகளைத் தாண்டி “உணவு மற்றும் வாழ்வியல் முறை” (Lifestyle Medicine) மூலமே சர்க்கரை நோயை கட்டுக்குள் (Diabetes Reversal) கொண்டுவர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1.உணவில் செய்ய வேண்டிய நவீன மாற்றங்கள்:
புரதச் சத்து மற்றும் கொழுப்பு
வெள்ளை அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகளைக் குறைத்து, பாதாம், வால்நட், முட்டை, மீன் மற்றும் பன்னீர் போன்ற புரத உணவுகளைச் சேர்ப்பது இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை 30-40% குறைக்கிறது.
பகுதி கட்டுப்பாடு (Portion Control)

உணவைத் தட்டில் எடுக்கும்போது அரைப் பங்கு காய்கறிகளும், கால் பங்கு புரதமும் (பருப்பு/முட்டை), கால் பங்கு மட்டுமே சிறுதானியம் அல்லது சாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சை வெங்காய சாலட்
தினசரி உணவில் 100 கிராம் பச்சை வெங்காயத்தை சாலட் போலச் சாப்பிடுவது, சாப்பிட்ட 4 மணி நேரத்திற்குள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எண்ணெய்
சுத்திகரிக்கப்பட்ட (Refined) எண்ணெய்களைத் தவிர்த்து, செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது இன்சுலின் எதிர்ப்பைக் (Insulin Resistance) குறைக்க உதவும்.
2.வீட்டு வைத்திங்கள் (Home Remedies)
வெந்தயம் மற்றும் மஞ்சள் பொடி
100 கிராம் வெந்தயம், 50 கிராம் மஞ்சள் மற்றும் சிறிது மிளகு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்; இந்தத் தூளை ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் அல்லது தண்ணீரில் கலந்து தினமும் இருவேளை குடித்து வரலாம்.

நெல்லி-மஞ்சள் நீர் (Amla-Haldi Water)
இரவு தூங்குவதற்கு முன் நெல்லிக்காய் சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து குடிப்பது கணையத்தின் (Pancreas) செல்களைப் புதுப்பிக்க உதவும்.
பட்டைத் தூள் (Cinnamon)
தேநீர் அல்லது சூப்பில் சிறிது பட்டைத் தூள் சேர்ப்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்கள் சரியாகப் பயன்படுத்த உதவும்.
பாகற்காய் மற்றும் இஞ்சி சாறு
வெறும் வயிற்றில் பாகற்காய் சாறுடன் சிறிது இஞ்சி சேர்த்து அருந்துவது நச்சுக்களை வெளியேற்றி சர்க்கரையைச் சீராக்கும்.
3. வாழ்க்கை முறை மாற்றங்கள் (Lifestyle Changes)
500 படிகள் நடைப்பயிற்சி
ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்பும் வெறும் 10-15 நிமிடங்கள் (சுமார் 500 படிகள்) மெதுவாக நடப்பது, சாப்பிட்ட பிறகு ஏற்படும் சர்க்கரை உயர்வைக் (Post-prandial spike) கட்டுப்படுத்தும்.

உடல் எடை மேலாண்மை
உங்கள் உடல் எடையில் 7-10% வரை குறைப்பது, சர்க்கரை நோய் பாதிப்பை 58% வரை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நீர்ச்சத்து (Hydration)
தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது சிறுநீரகம் வழியாகக் கூடுதல் சர்க்கரையை வெளியேற்ற உதவும்.
தூக்கத்தின் முக்கியத்துவம்
இரவு 7-8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால், உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரித்து சர்க்கரை அளவை உயர்த்தும்.
மதுவைத் தவிர்க்கவும்
மது சர்க்கரை அளவை அதிகரிக்கும், ஆகையால் அதனைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை அளவை கண்காணிக்கவும்
ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகும், உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறையும், கொஞ்சம் மாறுபட்டால் 3 மாதத்திற்கு ஒரு முறையும் , எப்பொழுதும் அதிகமாக இருப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குளுக்கோஸ் மானிட்டரைப் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்.
இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலமாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
உயர் ரத்த சர்க்கரை அவசரநிலைகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ளவும், உங்கள் ரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவும் சிறப்பு பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளை மருத்துவர்களே வழங்குவார்கள்.

