கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள்- கைது செய்த காவல்துறை…

கோவை: கேட்காமல் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கும் அரசு தங்களை ஒதுக்கி வைப்பது வேதனையை அளிக்கிறது என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பவர்களுக்கான உரிமைகள் சங்கம் சார்பில் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நடக்க இயலாத மாற்று திறனாளிகள் இணை சக்கரங்கள் பொருத்திய வாகனங்களில் அமர்ந்தபடி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஒடிசா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படுவதை காட்டிலும் அதிகமான உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் எனவே தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பதிவு பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பேட்டியளித்த இச்சங்கத்தின் உறுப்பினர் மகாலிங்கம் தெலுங்கானாவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது கடும் ஊனத்தில் இருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது படுக்கை மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தரும் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளும் வாக்காளர்கள் தான் என குறிப்பிட்ட அவர் மாதம் 1500 முதல் 2000 ரூபாய் வரை மட்டுமே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுவதாகவும் இது வாழ்வாதாரத்திற்கு போதாத தொகை எனவே இதனை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இட ஒதுக்கீட்டில் 4 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டு அதனை அமல்படுத்துவதில் தோய்வு இருப்பதாக குறிப்பிட்ட அவர் தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்ற வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

எந்த பெண்களும் கேட்காமலேயே ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை வழங்கப்படுவது மகிழ்ச்சி அதே சமயம் ஐந்து ஆண்டுகளாக நாங்கள் கேட்டு கொண்டிருக்கும் உதவித்தொகையை தராமல் தங்களை ஒதுக்கி வைக்கின்ற போக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

]

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.