இந்தியாவிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி திமுக- நடிகர் வாகை சந்திரன் கோவையில் பேச்சு

கோவை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநகர், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் துரை கதிரவன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கடந்த 27ம் தேதி கொண்டாடினோம். அதன் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் எப்படி முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு திட்டங்கள் பொது மக்களுக்கு போய் சேருகின்றதா என கவனித்தாரோ? அதேபோல், தமிழக முதல்வர் மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக இன்று முதலமைச்சராக அந்த திட்டங்கள் மக்களிடம் போய் சேர்கின்றதா? என உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அந்தந்த பகுதியில் என்னென்ன பிரச்சனை உள்ளது என கேட்டு தீர்த்து வருகிறார் என்றார்.

முன்னதாக, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசும்போது, இந்தியாவிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி திமுக. பெரியார், அண்ணா, கலைஞர் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான். நன்றாக தமிழ் பேசும் நடிகன் என கலைஞர் என்னை பாராட்டினார். இதை விட பெரிய விருது எனக்கு தேவையில்லை. சினிமா நடிகன் என்று சொல்வதை விட திமுக தொண்டன் என சொல்வதில் பெருமை படுகிறேன்.

அரசியல் கடுமையான புயலை எதிர்த்து படகை செலுத்துவது போல. சிலர் அதில் ஊஞ்சல் கட்டலாம் என நினைப்பது போல சாதாரணதுமானது அல்ல. எந்த கொம்பனாலும் திமுக- வை அழிக்க முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னது போல 2026ல் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. என்றார்.

இதனைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், ஊடகவியலாளர் செந்தில்வேல், பேரவை துணைத் தலைவர் போஸ் வெங்கட், பேரவை செயலாளர் பொள்ளாச்சி உமாபதி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாடிய கருத்தரங்கம் நடைபெற்றது.

Recent News

Video

Join WhatsApp