Dragon Trailer வெளியானது!: எனக்கு Success வேணும்-பிரதீப்

Coimbatore: லவ் டுடே புகழ், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

Advertisement

லவ் டுடே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ஏற்கனவே கோமாளி என்ற படத்தையும், குறும்படங்களையும் பிரதீப் எடுத்திருந்தாலும், லவ் டுடே படம் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

இப்படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை, ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்தது. இதனிடையே பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணைந்து டிராகன் படத்திற்கான கதையை எழுதினர். இதனை அஸ்வத் இயக்க, பிரதீப் ஹீரோவாக நடித்துள்ளார்.

டிராகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இந்தப் படம், தீவிரமான ஆக்‌ஷன், காதல் கொண்ட படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்குத் தகுந்தபடியே படத்தில் ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் அதனைக் கடந்து காதல் காட்சிகள் தான் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

Advertisement

இதையும் படிக்கலாமே: பஸ்சில் சீட் பிடிக்க வீச்சரிவாள்கள்

நடிகர்கள்

டிராகன் படத்தில் பிரதீப்புடன், அஸ்வத்தும் நடித்துள்ளார். உடன் அனுபாமா, கயடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் பிரதீப்புடன் கே.எஸ்.ரவிக்குமாரும், கவுதம் மேனனும் குத்தாட்டம் போடும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படம், கதைக்களத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் தனித்துவமாக இருக்கும் எனத் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இசை, ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகள், மற்றும் கதையின் மேம்பட்ட கட்டமைப்பு ஆகியவை, “டிராகன்” திரைப்படத்தைத் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆக்‌ஷன்-எமோஷனல் திரைக்கதையாக மாற்றும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

வெளியீடு எப்போது?

படத்தில் அனுபாமா உட்பட நடிகைகள் கவர்ச்சியில் கலக்கி உள்ளனர். படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிரைலரை பார்க்கும் போதே பிரதீப் ரங்கநாதனுக்கு படத்தில் பல ஜோடிகள் இருப்பது தெரியவருகிறது.

படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, இப்படம் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் பிரதீப்பின் காதலை வேறு ஒரு பரிமாணத்தில் காணலாம் என்ற குஷியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

டிராகன் படத்தின் டிரைலரை இங்கு காணலாம்:

Recent News