கோவை: குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் பட்டணம் ஊராட்சி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் ஊராட்சி மக்கள் முறையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பட்டணம் ஊராட்சியில் 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி 9 ஆயிரம் மக்கள் இருந்ததாகவும் அப்போது 3 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டணம் ஊராட்சி வசிக்கும் நிலையில் குடிநீரை அதற்கு ஏற்ப வழங்க வேண்டுமென நீண்ட காலமாக போராடி மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
மேலும் 5 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பட்டணம் ஊராட்சி மக்கள் வலியுறுத்தும் நிலையில்
தங்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில் வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான பேனரை பட்டணம் ஊராட்சி அலுவலகம் முன்பு வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி உள்ளனர்.

