கோவை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கோவை: கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

கல்லூரி முதல்வர் எழில் மற்றும் கோவை அரசு கலைக்கல்லூரி வேலைவாய்ப்புக் குழுவினர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

Advertisement

Recent News