கோவையில் கடையில் திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்…
கோவை ஆர்.எஸ்.புரம் பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக்(45). இவர் பெரியகடைவீதி பகுதியில் வெள்ளி விற்பனையகம் நடத்தி வருகிறார். இங்கு சிவானந்தா காலனி கண்ணப்பபுரத்தை சேர்ந்த மலர்விழி(46) என்ற பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வேலைக்கு வந்த மலர்விழி 164 கிராம் வெள்ளி தட்டை திருடி அதனை மறைத்து கொண்டு செல்ல முயன்றார். இதனை பார்த்த கடை காவலாளி மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து மலர்விழியை கையும், களவுமாக பிடித்து உரிமையாளர் கார்த்திக்கிடம் தெரிவித்தனர்.
இது குறித்து கார்த்திக் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய ஊழியர் மலர்விழியை கைது செய்தனர்.