பேரூரில் வங்கியில் தீ விபத்து

கோவை: கோவையில் இந்தியா வங்கியில் தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதம்

கோவை , சிறுவாணி சாலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வங்கிப் பூட்டிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் திடீரென வங்கியில் இருந்து புகை வந்து உள்ளது. அப்பகுதியில் சென்று கொண்டு இருந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து பேரூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஷட்டரை திறந்து பார்த்தனர். அப்பொழுது அங்கு பொருத்தப்பட்டு இருந்த UPS பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ முழுவதும் பரவியது தெரியவந்தது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். இது குறித்து பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இல்ல முக்கிய பொறுப்புகள் மின் சாதனங்கள் போன்றவை தெரிந்து நாசமாகின, தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வந்து தீயணைப்புத் தலைவர் மேலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றன.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு பெட்டி…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக பொதுமக்கள் மனுக்கள் அளிப்பதற்கு மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.