கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
மேலும் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் வரை ஆவணமின்றி பணத்தை கொண்டு செல்லலாம். அதற்கு மேல் இருந்தால் அதற்குரிய ஆவணத்தை பறக்கும்படை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில் கோவையில் 90 பறக்கும்படை குழுக்கள், 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பறக்கும்படை குழுவினர் கோவையில் சோதனைகளை துவக்கி உள்ளனர். மேலும் கட்சி கொடிகளுடன் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் பறக்கும் படை அதிகாரிகள் கட்சி கொடிகளை அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பறக்கும்படை குழுவினர் எங்கு வேண்டுமானாலும் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

