கோவை: மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக Fun Republic Mall நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள Fun Republic Mall-ல் மார்ச் 15-ஆம் தேதி “Let’s Celebrate Her” என்ற சிறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழா, பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது.
இதில் மெஹந்தி போட்டி, ரங்கோலி போட்டி, மேக்-ஓவர் போட்டி மற்றும் Fashion Walk உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.
ரொக்கப் பரிசுகள்

போட்டிகளில் வெற்றி பெறும் மகளிருக்கு ரூ.40,000 வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளனளை ஒதுக்கியுள்ளது. மேலும், சாதனை படைக்கும் 10 பெண்களுக்கு “Honour Her” சாதனை விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் பெண்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொள்ளலாம் என்று Mall நிர்வாகம் அறிவித்துள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள முன்பதிவு செய்வது அவசியம் என்றும், மேலும் விவரங்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் Fun Republic Mall நிர்வாகம் அறிவித்துள்ளது : 8655653962

