மருதமலையில் கந்தர் சஷ்டி- எப்போது என்னென்ன நிகழ்ச்சிகள்…

கோவை: மருதமலையில் கந்தர் சஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 22.10.2025ஆம் தேதி முதல் 28.10.2025ஆம் தேதி வரை கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு எந்தெந்த நாட்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி 22ஆம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெறும் என்றும் காலை 9:15 மணிக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தினம் தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை யாகசாலை பூஜை அபிஷேக பூஜைகள் நடைபெறும் என்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமி திருவீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27ஆம் தேதி காலை 6:30 மணிக்கு மூலவரிடம் ஷண்முகார்ச்சணை நடைபெறும் காலை 11 மணிக்கு உற்சவரிடம் ஷண்முகார்ச்சணை நடைபெறும் என்றும் மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வழங்குதல் சுவாமி ஸம்ஹாரத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்வும் அதனை தொடர்ந்து 4 மணிக்கு சாந்த அபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28ஆம் தேதி காலை 10:30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தினங்களிலும் மலைக்கோவிலுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மேலே செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மலை படிக்கட்டுகள் அல்லது கோவில் பேருந்துகளில் மட்டுமே மேலே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News