கோவை: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண் வேடமிட்டு அலப்பறை செய்த சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து, பொதுமக்கள் முன்னிலையில் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அதனை ரீல்ஸ் ஆக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். பெண் வேடமிட்டு அங்குமிங்கும் ஓடியதோடு, அதனைப் பார்த்து ஷாக் ஆன பெண்களையும் வீடியோவாக பதிவு செய்து, ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாகவும், குறிப்பாக தாங்கள் நடனம் ஆடும்போது அனுமதி இன்றியும், சட்டத்திற்கு எதிராகவும் பல பெண்களை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளதாக இவர்கள் மீது புகார் எழுந்தது. மேலும், இவர்கள் பல்வேறு பொது இடங்களில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இது போன்ற சம்பவங்களால் மற்ற இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களும் இதே போல் செய்ய தொடங்குவார்கள் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோ காட்சிகள்
காந்திபுரத்தில் அட்டகாசம் செய்த இன்புளுயன்சர்களிடம் விசாரணை#coimbatore #coimbatorenews #gandhipuram #nccnews #newscloudscoimbatore pic.twitter.com/WlwJz6n5ZH
— News Clouds Coimbatore (@newscloudscbe) March 9, 2026
இந்த நிலையில் அனுமதியின்றி பொது இடத்தில் ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜிக்கு காட்டூர் போலீசார் சம்மன் அளித்த விசாரணைக்கு அழைத்தனர். இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அந்த விடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்திய போலீசார், காட்டூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆட்டம்போடும் இன்ப்ளூயன்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

