கோவை: தங்கம் விலை இரண்டாவது நாளாக இண்று குறைந்துள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை காணலாம்.
கோவையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு பவுனுக்கு ரூ.480 விலை குறைவை சந்தித்தது. ஒரு பவுன் ரூ.71,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40ம், ஒரு பவுனுக்கு ரூ.320 விலை குறைந்துள்ளது இன்று ஒரு கிராம் ரூ.8,895க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.71,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரு பவுனுக்கு ரூ.280 விலை குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.7,325க்கும், பவுன் ரூ.58,600க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் கடந்த இரண்டு நாட்களாக மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
