Gold rate today: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கம் விலை இந்த வாரம் பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது.
இதனிடையே இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், பவுன் ரூ.99,520க்கும் விற்பனை ஆகி வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,380க்கும், ஒரு பவுன் ரூ.83,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோவையில் இன்று ஒரு கிராம் வெள்ளிக்கு 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.224க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,24,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

