கோவையில் அரசு பள்ளியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்…

கோவை: அரசுப் பள்ளியில் உணவு அருந்தி உடல் பாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பள்ளி குழந்தைகள் வீடு திரும்பினர்.

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்தி உடல் உபாதைகளால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் வீடு திரும்பினர்.

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இன்று மதியம் பள்ளியில் உணவருந்திய பொழுது பல்லி விழுந்தது தெரிய வந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து 43 பள்ளி குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனை முதல்வர் மேற்பார்வையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இன்று மதியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 43 பள்ளி குழந்தைகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மூடப்பட்ட LPG பங்க்- வாகன ஓட்டிகள் அவதி…

கோவை: கோவையில் LPG பங்க் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டோ LPG எரிவாயு பங்க் திடீரென மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.