10ம் வகுப்பு பொதுத்தேர்வு கோவையில் துவங்கியது…

கோவை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியுள்ள நிலையில் கோவையில் 38,390 மாணவ மாணவிகளும் 1237 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

Advertisement

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 159 தேர்வு மையங்களில் 509 பள்ளிகளைச் சார்ந்த 18861 மாணவர்கள் மற்றும் 19529 மாணவிகள் என மொத்தம் 38390 மாணாக்கர்களும் 1237 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்விற்காக 11 மந்தணக்கட்டுக்காப்பு மையங்களில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய காவலர்கள் உதவியுடன் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வுமையங்களுக்கு சென்றடையவும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுக்காப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்க்காக 159 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 159 துறை அலுவலர்கள் 2075 அறைக் கண்காணிப்பாளர்கள், 250 நிலையான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 316 அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் அரசு தேர்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி 946 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணியில் 946 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...