கோவை: கோவை அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோவையில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அரங்குகள், தனியார் கடைகள், மேஜிக் ஷோ, ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் கோவை அரசு பொருட்காட்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பொருட்காட்சி அடுத்த 45 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், 20க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள், கேளிக்கை ராட்டினங்கள், ஐஸ்கிரீம், அப்பளம், பானிபூரி உள்ளிட்ட கடைகள், ஸ்நோ வேர்ல்ட், 3d ஷோ போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இதில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் சாமிநாதனை தமிழ்நாடு பொருட்காட்சி சங்க பொதுச்செயலாளர் அபுதாஹிர் மற்றும் நிர்வாகிகள் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.