கோவை: கோவையில் நிலத்தடி நிர் சாயம் கலந்து வருவதாக தண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்களால் புகார் அளிக்க வந்தனர்.
கோவை சின்னவேடம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், மேலும் சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு நிறம் மாறி வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு பலமுறை புகாரளித்தும் நடவடிக்கையில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். இந்த மாசுபட்ட நிரை பயன்படுத்துவதால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, தோல் சம்பந்தமான நோய்களலும், சளி,இரும்மல், உட்பட பல்வேறு தொற்றுகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாட்டில் தண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

