Header Top Ad
Header Top Ad

GST 2.0:வரி குறைப்பு… இந்திய பொருட்களையே வாங்குங்கள் – மோடியின் உணர்ச்சி மிகுந்த பேச்சு!

GST 2.0: ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அந்த முழு உரையை இந்த தொகுப்பில் படிக்கலாம்…

ஜிஎஸ்டி வரி அமலாவதற்கு முன்பு நாட்டில் 12 வகையான வரிகள் இருந்தன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

2014ல் நாட்டின் பிரதமராக சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்தே 2017ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுடன் கலந்து பேசி சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக, ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்தோம்.

Advertisement

தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுத்துள்ளன. ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு ஜிஎஸ்டி மூலம் பூர்த்தியானது.

தற்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. அதனால் தான் தற்போது இரண்டாம் தலைமுறை வரி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. காலமும், தேவையும் இதனை முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. இனி 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்

உணவுப் பொருட்கள், மருந்துகள், அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை விரைவில் மலிவாகப்போகின்றன, நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரூ.12 லட்சம் வரை வருவாய் இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பலன்களை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்

வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களை வாங்குவது இனி எளிதாகும். ஏனென்றால் அவற்றின் விலையும் குறைகிறது.

நாட்டு மக்களே தேவர்கள் என்ற தாரக மந்திரத்துடன் நாங்கள் நடைபோடுகிறோம்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை, தற்சார்பு பாரதம் என்ற பாதை மூலமாகவே நாம் அடைய முடியும். இதனை நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

எதையெல்லாம் உள்நாட்டில் தயாரிக்க முடியுமோ அதை எல்லாம் நாம் இங்கேயே தயாரிக்க வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ முதுகெலும்பாகத் திகழ்கிறது. நாம் தயாரிக்கும் பொருட்கள் உலகில் தயாரிக்கப்படும் பொருட்களிலேயே சிறந்த பொருளாக இருக்க வேண்டும்.

அது உலகின் அனைத்து சந்தைகளிலும் கிடைக்க வேண்டும், அந்தளவுக்கு தரமான பொருட்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இதனால் இந்தியாவின் அடையாளமும், பெருமையும், கவுரவுமும் அதிகரிக்கும்.

இந்தியாவின் விடுதலைக்கு சுதேசி என்ற மந்திரம் எப்படி சக்தியைக் கொடுத்ததோ, அதேபோல் சுதேசி பொருட்கள் நாட்டிற்கு புதிய வலிமையைக் கொடுக்கும்.

நமது பாக்கெட்டில் இருக்கும் ஒரு சீப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? என்று கூட நமக்கு தெரியாது. எனவே நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் இந்தியாவின் மகன், மகள்களின் வியர்வை அடங்கியதாக இருக்க வேண்டும். உள்நாட்டுப் பொருட்களை வாங்கும் போது அதனை பெருமையோடு சொல்லுங்கள். நான் சுதேசி பொருட்களை விற்பனை செய்கிறேன் என்று பெருமிதம் கொள்ளுங்கள்

இது நடந்தால் பாரதம் வெகு விரைவில் வளர்ச்சியடைந்த பாரதமாக மாறும்.
மாநிலங்களிலும் உற்பத்திக்கு உத்வேகத்தைக் கொடுங்கள். மத்திய மாநில அரசுகள் இணைது செயல்பட்டால் தற்சார்பு பாரதம் என்ற இலக்கை விரைவில் அடையலாம்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இச்செய்தியை தமிழக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து, நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவதற்காக பிரதமர் கூறிய வழிமுறைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் வாசகர்களே…

Recent News