கோவையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை… மேலும் தொடருமாம்!

கோவையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை… மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும்!

Advertisement

கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும், ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தனது இணையதளம் மற்றும் சமுக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்டிருந்தது.

இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

Advertisement

இதனிடையே நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெயதது. சில இடங்களில் விடிய விடிய அடை மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

கோவையில் மேலும் இரண்டு நாட்களுக்கு (இன்று, நாளையும்) இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்த நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Heavy Rain in Coimbatore yesterday… Continuous for the next two days

Recent News