Orange alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று காலை அறிவித்தது.
இதனிடையே, மதியம் 2 மணி நிலவரப்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவையைப் பொறுத்தவரை மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
மேலும், தேனி மாவட்டத்தில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Raincoat for Men waterproof: Order Now



