Header Top Ad
Header Top Ad

கோவை, திருப்பூர், நீலகிரியில் மழை எப்படி? வானிலை மையம் விளக்கம்!

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவையில் கடந்த வாரம் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மழை சற்றே ஓய்ந்தது. இதனிடையே நேற்று மாலை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

இன்று அதிகாலை முதலே மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே இன்றைய வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தென்காசி, சேலம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் தொடர்ந்து மழை பெயது வரும் நிலையில், நகரின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பொதுமக்கள் ரெயின் கோர்ட் அணிந்தும், குடை பிடித்தபடியும் தங்கள் வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

Recent News